2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிடும்போது இதுவரை கிடைத்துள்ள மேன்முறையீடுகள் தற்போது பரிசீலிக்கப்படுகின்றன.
எதிர்வரும் 31 ஆம் திகதி, 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment