கொரோனா தொற்றினால் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 100 ஆசிரியர்களும் 1000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவர், பாடசாலைகளில் கொரோனா அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கமே என இலங்கை ஆசிரியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கம் பாடசாலைகளுக்கான எவ்விதமான சுகாதார பாதுகாப்பு திட்டத்தையும் வழங்கவில்லை எனவும், இதனால் ஒட்டு மொத்த பாடசாலை சமூகமும் பாதிப்படைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment