788 300x233 1
செய்திகள்அரசியல்இலங்கை

‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என பதிவிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களம்!

Share

இலங்கை தமிழ் மக்களை  ‘சிறுபான்மை குழு’ என்று குறிப்பிட்டிருந்த அமெரிக்க  இராஜாங்க திணைக்களம் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று  மாற்றம் செய்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டப் போதே தமிழ் மக்களை ‘சிறுபான்மை குழு’ என பதிவிட்டிருந்தது.

மேலும்,

தமிழ்  மக்களின் பிரமுகர்கள் குழு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான  பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் அண்மையில் சந்திப்புக்களை நடத்தினர்.

சிறுபான்மை குழு என தமிழ் மக்களை சிறுமைப்படுத்தி அவர்களின் அரசியல் ஸ்தானத்தை குறைமதிப்பு செய்வதை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE) என்ற தமிழ் இளையோர்களினால் வழிநடத்தப்படும் அமைப்பு ஆட்சேபித்து ராஜாங்க திணைக்களத்திற்கு ட்விட்டர் செய்தியிட்டது.

அதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில்  உலகளாவிய சில முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கினர். இஸ்ரேல் நாட்டின் பிரபல சமூக விஞ்ஞானி பேராசிரியர் ஓரின் யிவ்டாசல் (Prof Oren Yiftachel ), ஓக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டேல் (Anuradha Mittal) , இந்தியாவின் பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மேத்தா பட்கர் ( Medha Patkar),  சமூக செயற்பட்டாளர் கலாநிதி  சுவாதி சக்கரபூர்த்தி ( Dr. Swati Chakraborty ) என பலரும் தமது ஆதரவை தெரிவிக்க தொடங்கினர்.

இந்நிலையில் இன்று அமெரிக்க  இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு செயலகத்தின்  துணை செயலர் டொனால்ட் லூ (Donald Lu)  வுடன் டயஸ்போறா அலையன்ஸ் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்று நடந்தது. இச்சந்திப்பை தொடர்ந்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று  மாற்றம் செய்து  தமது ட்விட்டரில் ராஜாங்க திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த அமெரிக்க அலுவலகங்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சிறுபான்மை குழுவாக சித்தரித்து தமது ட்விட்டரில் செய்தி வெளியிட்டதனை, அரசியல் தீர்வு குறித்து பேசுவதாக தமிழ் மக்களின் பிரமுகர்கள் குழுவும் இதற்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல் அச் செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...