1486349087 8038951 hirunews Fake driving licenses
செய்திகள்இலங்கை

போலி சாரதி அனுமதிப் பத்திரம் – பொலிஸார் சுற்றுவளைப்பு!

Share

கொழும்பில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த சம்பவம்  தொடர்பில்  குற்றப்புலனாய்வுக்கு வந்த இரகசியத் தகவலை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மோசடியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 27 போலி சாரதி அனுமதிப் பத்திரங்களும் 41 காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களும், சில அச்சிடல் உபகரணங்க்ளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாரதி அனுமதி பத்திரம் பெறாதவர்களுக்கு ரூபா. 12 ஆயிரத்தை செலுத்தி 5நிமிடங்களில் போலி அனுமதி அட்டையை வழங்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாகவே வாகனம் ஓட்டும் பயிற்சி இல்லாதவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாதவர்களுக்கும் இங்கு போலி அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இப்போலி அனுமதி பத்திரங்களுக்கான உபகரணங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...