chain snatching case
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

Share

யாழில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (16) பகல்  12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவரென்றும் , அவர்  சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிளொன்றில்  வந்த இனந்தெரியாத இரு இளைஞர்கள், பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

இதன்போது, சங்கிலியின் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணி கைகளிலும் அகப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், குறித்த பெண் முறைப்பாடொன்றை பதிவுச்செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...