parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

Share

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும், நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்கவும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 33 சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறை ஒன்று எதிர்வரும் வாரத்தில் உருவாக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...