Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

Share

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்படும் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

குறித்த தண்டனை தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு, நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியைப் பார்த்து ஹேமசிறி பெர்னாண்டோ, “நீதிபதி ஐயா, இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும். இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன” என கூறியுள்ளார்.

மேற்படி அவர் குறிப்பிட்டுள்ள கருத்தானது சர்ச்சையினை உருவாக்கியுள்ளது.

 

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...