oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

Share

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், “இம்முறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தில் நுகர்வோர் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர், மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...