ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

Share

 

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை சத்திர சிகிச்சையின் மூலமாக வெற்றிகரமாக பிரித்து எடுத்ததன் வாயிலாக இந்த சாதனை இடம்பெற்றுள்ளது.

பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்றுமாக இந்தச் சத்திரசிகிச்சைக்காக 15 விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த வரலாற்று சாதனைமிக்க சிகிச்சையை வழங்கியுள்ளனர்.

ஒரு குழந்தைக்கு மட்டும் இருந்த 2 சிறுநீரகங்களில் ஒன்றைப் பிரித்தெடுத்து, மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றும் சத்திரசிகிச்சையும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான ஒரு சத்திரசிகிச்சையானது உலக வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரும், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, மாவனெல்ல தாயொருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குறித்த இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கமைய சிறுநீரகங்களின் செயற்பாடு சீரானது. தொடர்ந்து, கடந்த மாதம் 10 ஆம் திகதி இவர்கள் பிரித்தெடுக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சைக்காக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்ட நேரம் குழந்தைகள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளின் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் மூளை ஆகியவற்றின் சீரான செயற்பாடே இந்த வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர் அஷானி ரத்நாயக்க, குறிப்பிட்டார்.

மேலும், இடுப்பு பகுதியில் இணைந்திருந்த குழந்தைகளை பிரிக்கும் சத்திர சிகிச்சை இலங்கையில் இதுவரை ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு குழந்தையிலிருந்து சிறுநீரகத்தைப் பெற்று மற்றைய குழந்தைக்கு பொருத்தி அவர்களைப் பிரிக்கும் இத்தகைய சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உடல் எடை அறுவை சிகிச்சைக்கு ஏதுவான நிலையை அடையும் வரை சுமார் 5 ஆண்டுகள் காத்திருந்த பின்னரே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த குழந்தைகள், அடுத்த சில நாட்களில் சாதாரண விடுதிக்கு மாற்றப்படவுள்ளதுடன் குழந்தைகள் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...