world 139
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்கள்: ஒரு பார்வை!

Share

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், விபத்துக்கள் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்துரட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் நேற்று (12) இரவு மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மோதலில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பகையினால் ஏற்பட்ட இந்த மோதலில், சந்தேகநபர் மரப்பலகையினால் தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 750 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 150 கிராம் ஹெரோயினுடன் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நீர்கொழும்பில் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 53 வயதுடைய பெண் ஒருவரும், பாதுக்கையில் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1080 லீற்றர் ‘கோடா’வுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுப்பொத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடஹப்பொல – ரம்பாவெவ வீதியில் நேற்று பகல் லொறி ஒன்று பாலத்தின் பாதுகாப்புச் சுவருடன் மோதி கொழுமுணு ஓயா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் மீரிகம மற்றும் கல்எலிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 63 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...