20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

Share

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் வாழ்வாதாரத் தொழில்களான விவசாயம் மற்றும் மீன்பிடிச் செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இந்தத் தகவலை வெளியிட்டார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார் பகுதியில் தற்போது மீன்பிடிப் பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், மீனவர்கள் தமது தொழிலைத் தடையின்றி முன்னெடுக்கத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் ஊடாக விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் பெரும்போக அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளதை கருத்திற் கொண்டு, விவசாயப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் இரு துறைகளும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு குறித்துப் பேசிய பிரதி அமைச்சர், இந்தியாவிலிருந்து அண்மையில் வந்துள்ள எரிபொருள் கப்பல் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடு ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டார். மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மேலதிக விநியோகம் குறித்துப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் காணப்பட்ட அரசியல் தலையீடுகள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகச் சீர்மையை உறுதிப்படுத்தப் பொலிஸாரும் அரச அதிகாரிகளும் நேரடியாகக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை இலக்கு எனப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மேலும் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...