03 16
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

Share

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 பேர் மீதான வழக்கு, ஆகஸ்ட் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (மார்ச் 16) கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகச் சமர்ப்பித்துள்ளதாகவும் கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றத்தை மன்றில் சமர்ப்பிப்பதற்காகவே இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்பட்ட குறித்த வீதி நாடகம், உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...