15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

Share

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கியூபா உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுக்கு அருகே, கியூப கடலோர காவல்படை கப்பலை அணுகிய அமெரிக்க படகில் இருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

படகில் இருந்த 10 பேரும் அமெரிக்காவில் வசிக்கும் கியூபா நாட்டவர்கள். சிலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் ஆயுதங்களுடன் காணப்பட்டனர். அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நாட்டுக்குள் ஊடுருவத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.காயமடைந்த ஆறு பயணிகளும் அடையாளம் காணப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், கியூபாவுக்கான வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்துள்ளதால் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...