nationalherald 2026 02 10 ht7wqxnm Bdesh factory
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடன் வங்காளதேசம் அதிரடி ஒப்பந்தம்: ஆடை ஏற்றுமதிக்கு வரி விலக்கு – இந்தியாவிற்குப் போட்டியாகப் புதிய வியூகம்!

Share

வங்காளதேசத்தில் இன்னும் இரண்டு நாட்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களைப் (பருத்தி மற்றும் செயற்கை இழை) பயன்படுத்தி வங்காளதேசத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு, அமெரிக்கச் சந்தையில் நுழையும்போது இனி ‘பூச்சிய வீத வரி’ (Zero Tariff) சலுகை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் உலகிலேயே இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடான வங்காளதேசம், சர்வதேச சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, வங்காளதேச தயாரிப்புகள் மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரியை 20 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சம்மதித்துள்ளது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள், இரசாயனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்கு வங்காளதேசம் தனது சந்தையைத் திறந்துவிட்டுள்ளது. குறிப்பாக, போயிங் நிறுவனத்திடமிருந்து 14 விமானங்களை வாங்குவதற்கும், சுமார் 15 பில்லியன் டொலர் பெறுமதியான எரிசக்தி இறக்குமதிக்கும் வங்காளதேசம் இணங்கியுள்ளது. அண்டை நாடான இந்தியா 18 சதவீத வரிச் சலுகையைப் பெற்றுள்ள நிலையில், வங்காளதேசத்தின் இந்த 19 சதவீத வரிக்குறைப்பு மற்றும் ஆடைத் துறைக்கான விசேட சலுகைகள் ஆசிய பிராந்தியத்தில் பெரும் வர்த்தகப் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...