trump wh af1 feb 6 1770433049681 hpMain
செய்திகள்உலகம்

ஒபாமா தம்பதி குறித்த இனவாதக் காணொளி: டொனால்ட் ட்ரம்பின் பதிவால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான இனவாதக் காணொளி ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

ட்ரம்பின் அதிகாரப்பூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், ஒபாமா தம்பதியினரின் முகங்கள் குரங்குகளின் உருவங்களுடன் இணைத்து (Morphing) மிகவும் இழிவான முறையில் காட்டப்பட்டிருந்தன.

இந்தக் காணொளி பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களும் இதனை ஒரு ‘அநாகரிகமான செயல்’ என விமர்சித்தனர்.

இந்த விவகாரத்தில் வெள்ளை மாளிகையும் ஜனாதிபதி ட்ரம்பும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது ஒரு ஊழியரால் செய்யப்பட்ட தவறு என்றும், ஜனாதிபதி ட்ரம்ப் இதனைப் பார்க்கவில்லை என்றும் விளக்கமளித்தது.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அந்த வீடியோவைப் பகிருமாறு தானே பணிப்புரை விடுத்ததாக ஒப்புக்கொண்டார். அதேநேரம், அதிலிருந்த இனவாதச் சித்தரிப்புகளைத் தான் கவனிக்கவில்லை என மழுப்பலாகப் பதிலளித்தார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் வரலாற்றைக் கொண்டாடும் மாதம் (Black History Month) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இவ்வாறானதொரு பதிவைப் பகிர்ந்தமை கறுப்பின மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்திடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...