127533494 slppmeeting001 1
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதத்தை ஜனாதிபதி செயலில் காட்ட வேண்டும்- வடக்கு-கிழக்கு கரிநாள் போராட்டத்திற்கு SLPP கடும் எதிர்ப்பு!

Share

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘கரிநாள்’ அனுஷ்டிக்கப்பட்டு பேரணிகள் நடத்தப்பட்டமைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், சுதந்திர தினத்தன்று வடக்கு-கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றி, கரிநாள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இது இனவாதம் தூண்டப்படுவதையே காட்டுகிறது. ஜனாதிபதி தனது பேச்சைச் செயலில் காட்ட வேண்டும் என இந்திக்க அனுருத்த வலியுறுத்தினார்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐ.டி (FCID) க்கும், நாமல் ராஜபக்சவை சி.ஐ.டி (CID) க்கும் அழைத்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் வேட்டை என அவர் சாடினார். அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையை மறைக்கவே ராஜபக்சக்களைக் குறிவைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

படையினர் உயிர்த்தியாகம் செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது. ஆனால், இந்த அரசாங்கம் படையினரின் சேவையை ‘டித்வா’ புயல் பாதுகாப்புடன் மட்டும் மட்டுப்படுத்த முயல்வது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், தேசத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படும் பிரிவினைவாத மற்றும் இனவாதச் செயற்பாடுகளைத் தடுக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...