images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

Share

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த விபரங்களின்படி 2021 இல் சுங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட 54,860 கிலோ வெள்ளைப்பூண்டை, சதொச ஊடாகப் பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

ஆனால், குறித்த வெள்ளைப்பூண்டுத் தொகையை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளனர்.

அக்காலத்தில் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 445 ரூபாவிற்கு விற்கப்பட்ட நிலையில், அதனை வெறும் 135 ரூபாவிற்கு விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 17,006,660 ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வெள்ளைப்பூண்டு பழுதடையும் நிலையில் இருந்ததால், நிறுவன ரீதியாக எடுக்கப்பட்ட முடிவின்ப்படியே அது விற்பனை செய்யப்பட்டதாகச் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், சந்தேகநபர்களைத் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்த நீதவான், வழக்கை மீண்டும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...