55618d90 f52f 11f0 b5f7 49f0357294ff 1
செய்திகள்உலகம்

ஜப்பான் நாடாளுமன்றம் அதிரடியாகக் கலைப்பு! பெப்ரவரி 8-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் சனே தகாச்சியின் அரசியல் காய்நகர்த்தல்!

Share

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்றே மாதங்களில் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, புதிய பொதுத்தேர்தலுக்கு இன்று (23) உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பானிய நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த கீழ் சபையை (House of Representatives) கலைப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம் இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கலைப்பு கடிதத்தை வாசித்தபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கைகளை உயர்த்தி, ஜப்பானியர்களின் பாரம்பரியமான “பான்சாய்” (Banzai – பல்லாண்டு வாழ்க) என்ற கோஷத்தை எழுப்பி இதனை வரவேற்றனர்.

சாதாரண நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமான முதல் நாளிலேயே சபையைக் கலைப்பது ஜப்பானிய வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

ஜனவரி 27 முதல் உத்தியோகபூர்வ பிரசாரங்கள் ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08-ஆம் திகதி ஜப்பான் மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவுள்ளனர்.

கடந்த 2025 அக்டோபர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற சனே தகாச்சி, தற்போது தமக்குக் கிடைத்துள்ள 70 – 90 சதவீத மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் தனது தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) பலத்தை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மக்கள் ஆதரவைப் பெறுவதே அவரது இலக்காகும்.

இருப்பினும், கடும் பனிப்பொழிவு நிலவும் பெப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...