செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத மருந்தகங்களுக்கு எதிராக அதிரடி: 9.5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம்!

Share

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தியமை மற்றும் தகுதிவாய்ந்த மருந்தாளர் இன்றி மருந்தகத்தை இயக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தனித்தனியாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து, இக்குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 3 இலட்சம் ரூபாய் அபராதமும், அம்பகோட்டே, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொண்ட கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு மருந்தகத்திற்கு 150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...