Parliament rejects misuse claims against Speaker Jagath Wickramaratne
செய்திகள்அரசியல்இலங்கை

ஊழியர்கள் போதைப்பொருள் பாவிப்பதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய்: சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கடும் மறுப்பு!

Share

பாராளுமன்ற வளாகத்திற்குள் ஊழியர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானம் பயன்படுத்துவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் எவ்வித அடிப்படை ஆதாரமுமற்றவை எனச் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் பாவிப்பதாகக் கூறப்படும் ஊழியர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித ஆலோசனையையும் அல்லது உத்தரவையும் வழங்கவில்லை.

பாராளுமன்ற உணவறைப் பகுதிக்குள் ஊழியர்கள் இரகசியமாக மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சபாநாயகர் ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெற இடமளித்தமைக்காகப் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகளைச் சபாநாயகர் குற்றஞ்சாட்டியதாக வெளியாகியுள்ள தகவல்களையும் பாராளுமன்ற செயலகம் முற்றாக மறுத்துள்ளது.

சபாநாயகரின் பெயரையும் பதவியையும் பயன்படுத்தித் திட்டமிட்ட முறையில் இவ்வாறான போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி இணையத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் இத்தகைய போலித் தகவல்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...