AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

Share

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தன்னை விடத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (09) எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப் ,

இதுவரை தான் 8 பெரிய போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தவை என்றார்.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போராக மாறத் தொடங்கியிருந்தது. ஏற்கனவே 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. அந்த இக்கட்டான சூழலில் தலையிட்டு நான் போரை நிறுத்தினேன்” என அவர் உரிமை கோரினார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு வொஷிங்டன் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அணுசக்தி பலம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான போரைத் தடுத்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காகத் தனக்கு நன்றி தெரிவித்ததாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை விமர்சித்த ட்ரம்ப், “ஒபாமா எதற்காகவும் எதையும் செய்ததில்லை, அவருக்கு ஏன் அந்த விருது வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால், நான் நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...