1729389794 Fake Notes L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் துணிகரம்: மரக்கறி வியாபாரியிடம் 5,000 ரூபா போலித் தாளைக் கொடுத்து மோசடி!

Share

மட்டக்களப்பு, பார் வீதியில் வீதியோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரி ஒருவரிடம், போலி 5,000 ரூபா நாணயத்தாளைக் கொடுத்து நபர் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

பார் வீதியில் தனது ‘பட்டா’ (Batta) ரக வாகனத்தில் மரக்கறி விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரியிடம் வந்த நபர் ஒருவர், மரக்கறிகளை வாங்கியுள்ளார்.

கொள்வனவு செய்த பொருட்களுக்குப் பதிலாக 5,000 ரூபா தாளைக் கொடுத்துவிட்டு, அதற்கான மீதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வியாபாரத்தின் போது நிலவிய அதிக மக்கள் கூட்டம் காரணமாக, பணத்தைச் சரிபார்க்காத வியாபாரி, பின்னர் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீதிப் பணம் கொடுக்க முயன்றபோதே அது வெறும் சாதாரண காகிதத்தில் அச்சிடப்பட்ட போலித் தாள் என்பதை உணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வியாபாரி இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வாறான போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட ஒரு கும்பல் இயங்கி வரக்கூடும் என்பதால், குறிப்பாக 5,000 மற்றும் 1,000 ரூபா தாள்களைப் பெறும் போது அதன் பாதுகாப்புத் தன்மைகளைச் சரிபார்த்து வாங்குமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...