images 14
இலங்கைசெய்திகள்

நுண்கடன் தற்கொலைகளைத் தடுக்கப் புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Share

இலங்கையில் நுண்கடன் (Microfinance) காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், நுண்கடன் சுமை மற்றும் அதனால் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக இதுவரை சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கவலையளிக்கும் தகவலைச் சுட்டிக்காட்டினார். ஏழை மக்களைக் கடன்பொறியில் இருந்து விடுவிக்கவும், நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பெயர் மற்றும் சின்னத்தை (Logo) சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, போலியான மொபைல் செயலி (Mobile App) ஊடாகப் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் உத்தியோகபூர்வ செயலி போன்றே வடிவமைக்கப்பட்ட போலி செயலி மூலம் வைப்பாளர்களிடம் இருந்து பணம் திரட்டப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்துக் கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர கருத்துத் தெரிவிக்கையில், “பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் செயலிகளை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மோசடி தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.”

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...