26 695a97d4bf708
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியானது நட்சத்திரங்களின் ஊதிய விபரங்கள்!

Share

இயக்குநர் எச்.வினோத் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக எதிர்வரும் 9ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.
மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 3ஆம் திகதி வெளியானது இந்த டிரெய்லர் அதிக பார்வைகளை பெற்று தற்போது யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஜன நாயகன் படத்தில் யார் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, ரூ.380 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் ரூ.220 கோடி சம்பளமும்,
இயக்குநர் எச்.வினோத்துக்கு ரூ.25 கோடியும்,
இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடியும்,
பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ரூ.3 கோடியும்,
நடிகை மமிதா பைஜூவிற்கு ரூ.60 இலட்சம் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...