ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர். தங்களது ஆதர்ச நாயகனை நேரில் கண்டு வாழ்த்துப் பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ரசிகர்களின் நீண்ட நேரக் காத்திருப்பு வீண்போகாத வகையில், வீட்டின் வாசலுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர் உற்சாகமாக கை அசைத்த அவர், ரசிகர்களை நோக்கித் தனது பாணியில் பறக்கும் முத்தங்களை (Flying Kisses) பறக்கவிட்டார்.
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் “தலைவா வாழ்க” என விண்ணதிரக் கோஷங்களை எழுப்பினர். ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தனது ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள ரஜினிகாந்த், இந்த ஆண்டும் அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.