google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

Share

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தாமதங்களே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதற்குப் புதிய விசா முத்திரை தேவைப்படும் ஊழியர்கள், தற்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சில அமெரிக்கத் தூதரகங்களில் விசா நேர்காணல் சந்திப்புகளுக்கு (Appointments) 12 மாதங்கள் வரை காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வெளியே நீண்ட காலம் தங்கியிருக்க நேரிடும் அபாயம் உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எச்-1பி (H-1B) விசா விண்ணப்பதாரர்களைக் கடுமையாகச் சரிபார்க்கும் புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. இதில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளைச் சரிபார்ப்பதும் அடங்கும்.

இந்த ஆண்டு புதிய H-1B விண்ணப்பங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 100,000 டொலர் கட்டணத்தை விதித்துள்ளது, இது தொழில்நுட்பத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களை இது அதிகம் பாதித்துள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet), விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...