images 2 4
இலங்கைசெய்திகள்

மாணவர்களுக்கு தவணைப் பரீட்சை இரத்து: கட்டாயம் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு உத்தரவு!

Share

நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காகத் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.

அதன்படி, 6ஆம் தரம் முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலை அதிபர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த அறிவுறுத்தலைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பரீட்சை இரத்துச் செய்யப்பட்ட நிலையில், இந்த மாணவர்களை அடுத்த கல்வித் தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், 11ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்த முடியும் என அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...