899996 64644 ymvbvgbkmq 1501660736
அரசியல்இலங்கைசெய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழல்: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார்!

Share

நாட்டிற்குப் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான விலைமனுக்கோரல் செயல்பாட்டில் தலையிட்டு, ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். அவரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சாட்சியங்களைச் சமர்ப்பித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிரான புகாரை CIABOC முன்வைத்த போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அர்ஜுன ரணதுங்க வெளிநாட்டில் இருப்பதால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று CIABOC நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல் சந்தேக நபரான தம்மிக்க ரணதுங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சாலிய பீரிஸ், விசாரணைகளுக்கு உதவி செய்யும் தமது கட்சிக்காரரை பிணைச் சட்டத்தின்படி விடுவிக்குமாறு கோரினார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த தலைமை நீதவான் தம்மிக்க ரணதுங்கவை தலா ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சாட்சிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது என அவரை கடுமையாக எச்சரித்தார். சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...