நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், 24 கரட் தங்கம் 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 339,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், இன்றைய தினம் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 312,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,375 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.