articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
இலங்கைசெய்திகள்

இரத்த சோகை மற்றும் தலசீமியா சிகிச்சைக்கு 5.4 இலட்சம் டெஸ்ஃபெரிஒக்சமின் ஊசி மருந்து கொள்முதல்: அமைச்சரவை அனுமதி! 

Share

குருதியை உறையச் செய்யும் இரத்தச் சோகை (Blood Anemia) மற்றும் தலசீமியா (Thalassemia) நோயாளர்களின் உடலிலிருந்து மேலதிக இரும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசி மருந்து பிபீ 500 மில்லிக்கிராம் (500mg) ஊசிமருந்துக் குப்பிகள் 540,000 விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்முதலுக்காக சர்வதேசப் போட்டியில் விலைமுறிகள் கோரப்பட்டதில், இரண்டு விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரேயொரு விலைமனுதாரரான இலங்கையின் ABC Pharma Services நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை 791.1 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...