MediaFile 2 3
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் – பொலிஸார் எச்சரிக்கை!

Share

சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகச் சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அவற்றை வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது, வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலைமையானது, தொலைத்தொடர்பு வசதிகளை விரைவாக வழமைக்குத் திருப்புவதற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாகப் பொலிஸார் பொதுமக்கள் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளனர், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனர்த்தங்களுக்கு உள்ளான வீதியொன்றைப் புனரமைக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான நிலத்தடித் தொலைத்தொடர்பு வயர்கள் தென்பட்டால், அது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...