Mahat Raghavendra 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மகத் ராகவேந்திரா அதிரடி மாற்றம்: குத்துச்சண்டைப் பயிற்சியில் புதிய தொடக்கம்!

Share

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தைப் பெற்ற நடிகர் மகத் ராகவேந்திரா, தற்போது தன்னுடைய பிசிக்கல் டிரான்ஸ்பர்மேஷன் (Physical Transformation) குறித்துப் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில சர்ச்சைகளில் சிக்கி பாதியிலேயே வெளியேறிய மகத், அதன் பின் படங்கள் பக்கமோ சின்னத்திரை பக்கமோ அதிகம் காணப்படவில்லை.

இந்த நிலையில், அவர் தன்னுடைய புதிய தொடக்கமாக முழு வீச்சில் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மகத் கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவிலும் பாக்ஸிங் பயிற்சி பெற்றார்.

இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் (Koen Mazoudier) பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது.

கடின உழைப்பை போட்டுத் தன்னை முழுவதுமாக மாற்றியுள்ள மகத் ராகவேந்திராவின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “அட இவரா இது” என ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். அவருடைய இந்தப் புதிய மாற்றம், அவர் மீண்டும் திரையுலகில் நுழையும் முயற்சியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...