MediaFile 1 4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான ஊழல் வழக்கு: கையடக்கத் தொலைபேசி கட்டணம் மோசடி – சாட்சிப் பதிவு நிறைவு, மேலதிக விசாரணை டிசம்பர் 9க்கு ஒத்திவைப்பு!

Share

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டின் சாட்சிகளில் ஒருவரான அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி நிதி முகாமையாளரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலதிகச் சாட்சி விசாரணைகளுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அவரது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிக் கட்டணமான ரூபா 240,000/- ஐ, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியிலிருந்து செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராகக் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...