MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

Share

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (26) தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேக நபரின் உடமையில் இருந்து 196 கிலோ 218 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் தொம்பே பகுதியில் வசிக்கும் 44 வயதான நபராவர். இவர் இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் ‘பைலட் சார்ஜெண்டாக’ பணியாற்றி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபர், நீதிமன்றங்களில் இருந்து தலைமறைவாகி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான செம்புக்குட்டி ஆராச்சிகே டிலான் தனுஷ்க லக்மாலின் மைத்துனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...