l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

Share

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது.

வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை குறித்த வலைதளங்கள் மீறியுள்ளதாக கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் இதனை பாதுகாப்பாக இருக்கவும், வெறுப்பு பேச்சு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தகவல்கள் குறித்தும் மற்றும் பயங்கரவாத தகவல்கள் தொடர்பாக புகார் அளிக்கவும் தேவையான நடவடிக்கைளை எடுப்பதற்கு என ஐரோப்பிய கமிஷன் டிஜிட்டல் சேவை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்தநிலையில், மெட்டா நிறுவனமும் மற்றும் டிக் டாக் செயலியும் இந்த சட்டத்தை மீறியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப்பிரிவின் நிர்வாக துணைத்தலைவர் ஹென்னா விர்குன்னன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐரோப்பிய யூனியனின் சட்டப்படி, சமூக வலை தளங்கள், தங்களின் பயனர்கள் மற்றும் சமூகத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கின்றோம்.

நமது ஜனநாயகம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பயனர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதுடன், அவர்களின் உரிமையை மதிக்க வேண்டும்.

ஆய்வுக்கு தங்களது அமைப்பை வெளிப்படையாக வைக்க வேண்டும் இதனை டிஜிட்டல் சேவை சட்டம் கடமையாக வைத்துள்ளது, தேர்வாக வைக்கவில்லை.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிப்பது என்பது, டிஜிட்டல் சேவை சட்டப்படி, அத்தியாவசியமான விதிமுறைகள் ஆகும்.

இது பயனர்களின் மனம் மற்றும் உடல்நிலையை ஏற்படுத்தும் தாக்கம் குறித்த தகவல்களை வழங்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...