இஸ்ரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) மற்றும் தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நிலைமை குறித்துப் பிரதமர் நெதன்யாகுவுக்கும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அவர்களுக்கும் இடையே தொலைபேசி அழைப்பு மூலம் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் தகவலின்படி, ஹமாஸ் உறுப்பினர்களுடன் நடந்த “துப்பாக்கிச் சண்டைக்குப்” பின்னரே இந்தப் புதிய தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதற்கிடையில், வடக்கு காசாவின் ஜபாலியா (Jabalia) பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக மேற்கோள் காட்டப்பட்ட அறிக்கையில், “ஆபத்தான சூழ்நிலை காரணமாக நோயாளர் காவு வண்டி குழுவினரால் அந்தப் பகுதியை அடைய முடியவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.