image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

Share

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

ஆனமடுவ கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய அதிபர் தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியாவார்.

சிறுமி முந்தைய நாள் பாடசாலைக்குச் செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த தடியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி, சிறுமியின் பெற்றோர் ஆனமடுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதன் அடிப்படையில், ஆனமடுவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...

25 68f237ebdbf18
செய்திகள்இலங்கை

தோற்றத்தை மாற்றிய இஷாரா செவ்வந்தி: காவல்துறை தகவல்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, கொழும்பு நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு...

actor vijay karur visit 112839198 16x9 1
செய்திகள்இந்தியா

தவெக அங்கீகரிக்கப்படவில்லை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சிப் பதில்!

கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பிரச்சாரம்...