7 7
இலங்கைசெய்திகள்

தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனம் – புலனாய்வுப்பிரிவின்ர் வெளியிட்ட தகவல்

Share

றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில், சந்தேகநபரான ‘கஜ்ஜா’ என்று அழைக்கப்படும் அருண விதானகமகே பயணித்திருக்கலாம் என்று குற்றப் புலனாய்வுத் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

தாஜுதீனின் கொலை தொடர்பாக, கடந்த 13 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் இக்கொலைக்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மித்தேனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கஜ்ஜா, தாஜுதீனின் மரணத்திற்கு முன்பு அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில் பயணித்ததை அவரது மனைவி புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி. காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டபோது அவரது மனைவியால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, காட்சிகளில் காணப்பட்ட நபர் கஜ்ஜா என்பதினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த தடயத்தினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் ஏனையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை ‘கஜ்ஜா’ என்று அழைக்கப்படும் அருண விதானகமகேவின் மூத்த புதல்வர், அக்காணொளியில் காணப்படுவது தனது தந்தையார் அல்ல என்றும் அது சம்பந்தமாக விசாரணை மீள ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...