10 6
இலங்கைசெய்திகள்

நாடு நாடாக சென்று நிதி திரட்டுவேன்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

Share

மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை நாடு நாடாக சென்று திரட்ட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

வெறுமனே வெளிநாடுகள் பொருளாதாரத்துக்கு மட்டுமே தமது உதவிகளை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேசம் தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தனக்கு நம்பிக்கை குறைவாகவே உள்ளதாகவும் அர்ச்சுனா இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் எந்த அரசாங்கம் கலந்தாலோசித்து அதற்குத் தீர்வு வழங்க முற்படுகிறதோ, அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, “எனது இனத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கத்துடன் இருந்துகொண்டு ஒரு இனத்தின் கோடாரி காம்பாக ஒருபோதும் இருக்கமாட்டேன்.

மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை நாடு நாடாக சென்று திரட்டவுள்ளேன். அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் எனக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர். இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதே அரசியல்வாதியின் பணி.

அத்துடன் நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு, உண்மையான தமிழ் பிரதிநிதி என்ற வகையில் கடமையாற்ற விரும்புகிறேன்.

வட மாகாணம் தற்போது சமூக ரீதியாக மோசமடைந்து விட்டது. 2009 ஆம் ஆண்டுடன் தமிழர்களின் கலாசாரம் சீரழிந்து விட்டது.” என தெரிவித்தார்.

மேலும், LGBTQ எனும் கருப்பொருளை ஊக்குவிக்கக் கூடாது எனவும் அதனை வைத்து பணம் சம்பாதிக்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
7 6
இலங்கைசெய்திகள்

வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம்...

8 6
இலங்கைசெய்திகள்

எந்த அரசியல்வாதிகளும் தப்பவே முடியாது..! அநுர தரப்பு சூளுரை

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள்...

11 6
இலங்கைசெய்திகள்

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு – ரணில் கடும் குற்றச்சாட்டு

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று...

6 6
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மக்கள்

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களிலிருந்து விடுபட்டது என...