25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

Share

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பி எதிர்வரும் நாட்களில் மொட்டுக் கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனாவுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தலைவராவார். என்னுடைய தலைவர் மகிந்த ராஜபக்ச, ஆக எங்களிடையே அரசியல் ரீதியான வேறுபாடுகள் உண்டு என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “அர்ச்சுனா எம்.பி வடக்கு தமிழ் மக்கள் மாத்திரமன்றி முஸ்லிம், சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புகிறார்.

ஆகவே, அவருக்கு சிக்கல் ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்த சந்தர்ப்பத்திலும் கூட முதலாவதாக நான் தான் அங்கு சென்றேன்.

அர்ச்சுனாவுக்கு அந்த நிலை ஏற்படும் போதும் நான் ஆதரவு தெரிவித்தேன்” என தெரிவித்துள்ளார்.

அண்மையில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் தலைவர் எனவும் தெரிவித்திருந்தார்.

அவருடைய கருத்து அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களுக்குள்ளான நிலையில் இன்று நாமல் ராஜபக்ச இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...

21
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்...