யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ்வழ்க்கை எதிர்வரும் 13ம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.
இதேவேளை, செம்மணி மனித புதைக்குழி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நிறைவில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சிறார்களின் என்புக்கூட்டுத் தொகுதிகளும் காணப்படுவதுடன் சிறார்களின் ஆடைகள், பொம்மைகள், காலணிகள், புத்தகப்பை, பால் போத்தல்கள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.