விஜய் ஒரு சுயநலவாதி என்று திவ்யா சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்து இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
40 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் சுயநலவாதிக்கும் உண்மையான அரசியல்வாதிக்கும் வித்தியாசம் உண்டு, விஜய் ஒரு சுயநலவாதி என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.