இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவல்களில் குறிப்பிடப்படிருக்கும் விடயங்களின்படி, 1920 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையின் வனப்பரம்பல் 49 முதல் 50 வீதம் வரை இருந்துள்ளது.
ஆனால் 80 வருடங்களின் பின்னர் 20 வீத வனப்பரம்பலே இருக்கிறது. அவ்வாறு என்றால் இலங்கையில் காடுகள் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் நோக்கினால் யானைகள் வாழ்வதற்கான காடுகள் இல்லை. அதன் படி 70 வீத யானைகள் வாழ்ந்த நிலப்பரப்பில் மக்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.
இலங்கையின் மொத்த நிலப்பகுதியில் 82 வீதம் மக்கள் வசிக்கும் பகுதிகளாகும்.அவற்றில் யானைகளில் வாழ்விடங்களாக 62 வீதம் காணப்படுகிறது.
இதுவே யானை மனித மோதல் உக்கிரமடைவதற்கான மூல காரணமாகும்.
இலங்கையில் சுமார் 6000 யானைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சரியான தகவல்கள் இல்லை. அவ்வாறு எடுத்துப் பார்த்தால் 6000 யானைகளில் 4000 யானைகள் மனிதர்களுடன் சேர்ந்திருப்பதாக கொள்ள வேண்டும்.
அதாவது 19 மாவட்டங்களில் 131 பிரதேச செயலர் பகுதிகளிலும் யானைகள் வியாபித்து காணப்படுகிறது. ஆகையால் யானை மனித மோதலை அரசியலாக பார்க்க வேண்டாம்.அவை சமூக -பொருளாதார் பிரச்சினையாக நோக்கினால் தீர்வை கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.