4 12
இலங்கைசெய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

Share

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் இப்றாலெப்பை முகம்மட் மாஹீரும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் வெள்ளையன் வினோகாந்தும் தெரிவாகினர்.இலங்கை உணவகம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று(26) காலை நடைபெற்றது.

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 09 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 05 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழு சார்பில் 03 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சி சார்பில் 01 உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 01 உறுப்பினரும் என 23 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இலங்கை உணவகம்

இதன்போது, உள்ளூராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார். இந்நிலையில், இருவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.

இதற்கமைய, உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளரை சபையின் 23 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சி – 01 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 09 சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் – 02 ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 02 உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பிரதிநிதிகள் ஆதரித்தனர். இலங்கை உணவகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய தவிசாளராக போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர், 14 ஆசனங்களை பெற்று சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.

எதிராக போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான சாப்தீன் நளீம் 07 வாக்குகளைப் பெற்றார்.

இதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர், புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

இதன்போது, நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

3 பேர் புதிய உப தவிசாளர் தெரிவில் உள்வாங்கப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் என்பருக்கு 12 வாக்குகளும் சுயேட்சைக்குழு உறுப்பினரான சுலைமாலெப்பை அப்துல் நஸார் என்பவருக்கு 07 வாக்ககளும் ஆனந்தம் சதானந்தம் என்பவருக்கு 2 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் 05 மேலதிக வாக்குகளை பெற்று உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் அஷ்ரப் தாஹிர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இலங்கை உணவகம்

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு சம்மாந்தறை பிரதேச சபையை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...