4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

Share

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின் தலைமையகம் அழிக்கப்பட்டபோது கொல்லபட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அவருடன் வேறு சில அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை(IRGC) அறிவித்திருந்தது.

தாக்குதலில் மஹ்மூத் பகேரி, தாவூத் ஷேகியான், முஹம்மது பாகெர் தாஹெர்பூர், மன்சூர் சஃபர்பூர், மசூத் டயூப், கொஸ்ரோ ஹஸ்ஸானி, ஜாவத் ஜோர்சாரா மற்றும் முஹம்மது அகஜாஃபரி ஆகியோர் உயிரிழந்தனர்.

ஈரானின் நகரங்கள், அணு சக்தி நிலையங்கள் மற்றும் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்கின்ற நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....