25 6846fe3539928
இலங்கைசெய்திகள்

யாழில் ரெலோ – தமிழரசுக் கட்சி சந்திப்பு

Share

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நடந்து கொள்ளும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் ரெலோ தலைவர்களிடம் இன்று தெரிவித்தனர் என அறியவருகின்றது.

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் இன்று பிற்பகலில் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர்.

வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்து கொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் எனத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்து விட்டனர் என அறியவந்தது.

அந்தந்தச் சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையைத் தமிழரசு கட்சியும் தவறாது பின்பற்றும்.

அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் தமிழரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று தமிழரசின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள் என அறியவந்தது.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...