24 16
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் முதலாவது தனியார் மயப்படுத்தல் திட்டம் ஆரம்பம்

Share

நட்டத்தை எதிர்நோக்கும் கேன்வில் ஹோட்டல் திட்டத்தை விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு நிபந்தனைக்கு ஏற்ப, அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மேற்கொள்ளும் முதலாவது தனியார் மயமாக்கல் நடவடிக்கையாக, இது அமையவுள்ளது.

இந்தநிலையில், ஹோட்டலை இயக்குவதற்காக, 2011இல் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமான கென்வில்லின் பங்குகளை விற்பனை செய்வதற்காக, முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த செயல்முறையை தொடர்வதற்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்

விற்பனையை நிர்வகிக்க முன்னணி தொழில்முறை சேவை நிறுவனமான டெலாய்ட்டை தக்க வைத்துக் கொள்ளவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜெயதிஸ்ஸ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

61 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலதனத்துடன், கொழும்பில் உள்ள 47 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 458 அறைகள் கொண்ட, இந்த ஹோட்டலை இறுதிச்செய்ய, இன்னும் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த மூலதனத்தை திரட்டும் வாய்ப்பு இல்லாததால், ஜனாதிபதி அநுரகுமாரவின் புதிய நிர்வாகம் சொத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதேவேளை கேன்வில் நிறுவனம், தென்பகுதியின்; கடற்கரையிலும் ஹோட்டல் ஒன்றை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...