13 29
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு

Share

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை கடந்த வெள்ளிக்கிழமை(23) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 710 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...