11 30
இலங்கைசெய்திகள்

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு: சுரேஷ் பிரேமசந்திரன் உறுதி

Share

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி (ITAK) ஆகியன பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவோம் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற பின் ஊடக சந்திப்பில் கலந்து காெண்டு கருத்து தெரிவித்த பாேதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு: சுரேஷ் பிரேமசந்திரன் உறுதி | Suresh Premachandran Speech In Vavuniya

இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும் பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளாேம்.

வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைக் காெண்டுள்ள தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானித்துள்ளாேம்.

இரண்டு முறை தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேசியுள்ளாேம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடனும் பேசியுள்ளாேம். அந்த அடிப்படையை வைத்து தான் பேசினாேம். தமிழ் கட்சிகளுடன் தான் நாம் பேசியுள்ளாேம்.

ஏனைய தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் இல்லை. ஆனால் ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அது அந்த கட்சியின் நிலைப்பாடே எனத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...