10 32
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் மிருகத்தனத்தை அழுத்தமில்லாமல் நிறுத்த முடியாது! உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி

Share

சர்வதேச தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா நடத்திய இரண்டாவது பாரிய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களில் சைட்டோமிரின் வடமேற்குப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 8,12 மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகள் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை, சர்வதேசத் தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், “ரஷ்யத் தலைமையின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் இல்லாமல், இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது. தடைகள் நிச்சயமாக உதவும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அமைதியை நாடுபவர்கள் அனைவரும் மாஸ்கோவின் போரை நிறுத்த தங்கள் உறுதியை காட்ட வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், மாஸ்கோவை நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு டசன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...